25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


நரம்பு தளர்ச்சி பிரச்னைகளில் இருந்து முற்றிலும் குணம் பெற…..
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நரம்பு தளர்ச்சி பிரச்னைகளில் இருந்து முற்றிலும் குணம் பெற…..

நியூரான்கள், நரம்பு திசுக்களைபாதிக்க துவங்கும்போது, நரம்புதளர்ச்சி நோய் ஏற்படுகிறது. நரம்பு தளர்ச்சிநோய் உள்ளது என்பதைஎளிதாக கண்டுபிடிக்க வேண்டும். இதுநபருக்கு நபர் மாறுபடும். சிலருக்குகை, கால், தாடைகளில்நடுக்கம் ஏற்படும்.

அன்றாட வாழ்க்கையில் சுறுசுறுப்பாக இருக்க முடியாது. வேகமாக எதையும் செய்ய முடியாது. வேகமாக நடக்க முடியாது. நடக்கும்போது தள்ளாட்டம் ஏற்படும். சிலருக்கு ஒரு விரல் ஆடும். அதிகளவில் நடுக்கம். தூங்கி எழும்போதோ அல்லது சேரில் இருந்து எழும்போதோ அவர்களால் சட்டென்று நேராக நிற்க முடியாது. கால் தரையில் படாமல் இருக்கும்.

தொடர்ந்து நடக்கும்போதுதான் பாதம் தரையில் படுவதையே அவர்களால் உணர முடியும். முகத்தில் உணர்வு இருக்காது. கை-கால் வலி, வீக்கம் இருக்கும். அவர்களால் ஒரு செயலை சரியாக செய்ய முடியாது. இவை நரம்பு தளர்ச்சியின் அறிகுறிகள்

தேவையான பொருட்கள்

மிளகு – ஒரு ஸ்பூன்

திப்பிலி – ஒரு ஸ்பூன்

சுக்குப்பொடி -ஒரு ஸ்பூன்

செய்முறை - 

மிளகு, திப்பிலி இரண்டையும் நுணுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அப்படியே பருகலாம்.

தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்தும் பருகலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள், அவற்றை தவிர்ப்பது நல்லது.

காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் பருகிய பின்னர் இதை பருகலாம். இதைவழக்கமாக சாப்பிட வேண்டும். 10 நாளில்மாற்றம் தெரியும்.

நரம்பு தளர்ச்சியின் அறிகுறிகள் படிபடிப்படியாக குறைவதை காணலாம். இதை எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

இதில் உள்ள3 பொருட்களும் நரம்பு மண்டலத்தை நன்றாக வலுப்பெறச்செய்யும். நரம்பு பிரச்னைகளை சரிசெய்து, நரம்பு தளர்ச்சி நோயை முற்றிலும் சரிசெய்யும். அனைவரும் பருகலாம். நரம்பு தளர்ச்சியால் அவதிப்பெறுபவர்களுக்கு சிறந்த பலனைத்தரும்.

இந்த மூன்று பொருட்களும் இயற்கையானதுதான் என்பதால், இது எவ்வித பக்கவிளைவையும் தராது. 

இயற்கை நிவாரணங்களை தேடிச்செல்லவேண்டும். அது பலனளிக்கவில்லையென்றால் மட்டுமே மருத்துவரை அணுகுவது சிறந்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News